நடிகை கங்கனா பிறந்தநாள் இன்று... வாழ்த்தும் பிரபலங்கள்... #HappyBirthdayKangana


நடிகை கங்கனா ரணாவத் இன்று தனது 38வது பிறந்த நாளைக் (மார்ச் 23, 1987) கொண்டாடுகிறார்..

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி என்ற ஊரில் பிறந்த கங்கனா, பாலிவுட்டில் தனது திறமையான நடிப்பால் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்..

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கங்கனா ரணாவத்தின் வெற்றி பெற்ற முக்கிய படங்கள்:

1. குயின் (Queen) – 2014 (நேஷனல் அவார்ட் பெற்ற படம்),

2. தனு வெட்ஸ் மனு (Tanu Weds Manu) – 2011,

3. தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் – 2015,

4. மணிகர்ணிகா – 2019 (ராணி லட்சுமிபாய் கதாபாத்திரம்),

5. தலைவி – 2021 (தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம்),

6. கேங்ஸ்டர் (Gangster) – 2006 (அவரின் முதல் படம், சிறந்த அறிமுக நடிகைக்கான Filmfare விருது பெற்றார்,

7. வோ லம்ஹே (Woh Lamhe) – 2006,

8. ஃபேஷன் (Fashion) – 2008 (இந்த படத்திற்காக தேசிய விருது பெற்றார்),

நடிகை கங்கனா ரணாவத் குடும்ப  வாழ்க்கையும் - சாதனைகளும்

பிறந்த தேதி: 23 மார்ச் 1987,

பிறந்த இடம்: பம்ப்லி, மண்டி, ஹிமாச்சலப் பிரதேசம், இந்தியா,

குடும்பம்:

அப்பா: அமர்தீப் ரணாவத் (வியாபாரி),

அம்மா: ஆசா ரணாவத் (ஆசிரியர்),

அண்ணன்: அக்ஷத் ரணாவத்,

அக்கா: ரங்கோலி ரணாவத், 

துணிச்சலான கருத்துக்கள் & அரசியல் 

பாலிவுட்டில் நேர்மையான, துணிச்சலான, விவாதமிக்க நடிகையாகவும், தனது கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தும் நபராகவும் பெயர் பெற்றவர்..

அரசியல்: 

முதன்முறையாக அரசியலுக்கு அடியெடுத்து வைத்துள்ளார்..

பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து பேசும் அவர், சமீபத்தில் 2024 மக்களவை தேர்தலில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்..

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து, பல பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்கிறார்..

பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..

அவரது ரசிகர்கள் #HappyBirthdayKangana என்ற ஹாஸ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்..

தனிமையில் இருந்தாலும் துணிச்சலாக வாழ்வதை கற்றுக்கொள்” – கங்கனா ரணாவத்.


Post a Comment

Previous Post Next Post